05 நாட்களில் அதிவேக வீதியூடாக 22 கோடி வருமானம்

கடந்த 05 நாட்களில் அதிவேக வீதியூடாக 22 கோடி ரூபா வருமானம்

by Staff Writer 16-04-2026 | 7:30 AM

Colombo (News 1st) கடந்த 10ஆம் திகதி முதல் நேற்று(15) வரையான 05 நாட்களில் அதிவேக வீதியூடாக ஈட்டப்பட்ட வருமானம் 22 கோடி ரூபாவை கடந்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் அதிவேக வீதியின் மூலம் 22 கோடியே 92 இலட்சத்து 42 ஆயிரத்து 40 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதியே அதிக பட்ச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.