கிளிநொச்சி - முகமாலையில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி - முகமாலையில் ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 15-04-2026 | 3:48 PM

Colombo (News 1st) கிளிநொச்சி - முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் சிறு காயங்களுடன் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் முகமாலை வடக்கு பகுதியை சேர்ந்த 72 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.