ஹங்கேரி அரசியலில் ஏற்பட்ட மாற்றம்

ஹங்கேரி அரசியலில் 16 வருடங்களின் பின் ஏற்பட்ட மாற்றம்

by Staff Writer 13-04-2026 | 4:07 PM

Colombo (News 1st) ஹங்கேரியின் 16 வருட கால ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது.

அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் Viktor Orbán தமது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட Péter Magyar வெற்றி பெற்று 16 வருட கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் 67 வீத வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை எதிர்க்கட்சியான Tisza பாராளுமன்றத்தில் 137 ஆசனங்களை வென்றுள்ளது.

ஹங்கேரி பாராளுமன்றத்தின் 199 ஆசனங்களுக்கான தேர்தலே நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் 77.8 வீத மக்கள் வாக்களித்துள்ளனர்.

பிரதமர் Viktor Orbán ரஷ்யா மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு நெருங்கியவராவார்.

புதிய நிர்வாகம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஹங்கேரியின் வெளியுறவு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் பொது சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள Péter Magyar மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் அடங்குகின்றன.