பஸ் நிலையத்தை சேதப்படுத்திய நபர் விளக்கமறியலில்..

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர் விளக்கமறியலில்..

by Staff Writer 12-04-2026 | 4:41 PM

Colombo (News 1st) நவீனமயப்படுத்தப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபரொருவர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 08ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

களனி பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டிருந்தார்.

ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் இலங்கை விமானப்படையின் ஊடாக மதிப்பீட்டு அறிக்கை கோரப்படவுள்ளது.

இலங்கை விமானப்படையினரால் புறக்கோட்டை மத்திய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.