நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

by Staff Writer 11-04-2026 | 10:46 PM

Colombo (News1st) வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேராவினால் கொண்டுவரப்பட்டது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு போதுமான மற்றும் தரமான நிலக்கரி கொள்வனவை உறுப்படுத்துவதில் வலுசக்தி அமைச்சர் தமது அடிப்படை கடமையை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளதாக தெரிவித்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. 

நாள் முழுவதும் இது தொடர்பிலான விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் 104 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.