.webp)

Colombo (News1st) பல்கலைக்கழக மாணவர்களுக்கான மார்ச் மாதத்திற்குரிய மஹபொல புலமைப்பரிசில் தவணை கொடுப்பனவு வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.
இம்முறை தவணை கொடுப்பனவை உரிய திகதிக்கு முன்னரே புலமைப்பரிசில் பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்க முடிந்ததாக நிதியத்தின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கான மஹபொல புலமைப்பரிசில் தவணை கொடுப்பனவு 10,000 ரூபாவாகும்.
