பெட்ரோலுக்கு இன்றிரவு முதல் 18 வரை QR இல்லை

பெட்ரோலுக்கு இன்றிரவு முதல் 18 வரை QR இல்லை

by Staff Writer 11-04-2026 | 11:06 PM

Colombo (News1st) இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு வரை பெட்ரோல்  கொள்வனவுக்கான QR முறை தற்காலிகமான நீக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஒற்றை - இரட்டை வாகன இலக்க முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் அறிவித்துள்ளது.

அத்துடன், டீசலுக்கான QR முறையை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 30 ஆயிரம் மெற்றிக் தொன் எரி எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளது.

மின்னுற்பத்திக்காக குறித்த எண்ணெய் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திகுமார குறிப்பிட்டார்.

இதேவேளை, இணக்கப்பாடுகள் சிலவற்றை அடிப்படையாக கொண்டு மசகு எண்ணெய் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.