.webp)
Colombo (News 1st) வெள்ள அனர்த்தத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் 'கம்மெத்த' செயற்றிட்டத்தின் பங்களிப்பை வழங்குவதற்கான திட்டம் இன்று(08) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை உயிர் பாதுகாப்பு சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் Minderoo அறக்கட்டளை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பெறப்பட்ட இந்த உயிர் பாதுகாப்பு படகுகள், கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி இராஜமகேந்திரன் அவர்களின் தலைமையில் இன்று காலை பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.
டித்வா சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட கம்மெத்த Care & Dare திட்டத்திற்கு உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் Minderoo அறக்கட்டளை பங்களிப்பை வழங்கியிருந்தது.
வெள்ள அனர்த்தத்தின் போது மக்களுக்கு உதவும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான உயிர் பாதுகாப்பு படகுகளின் தேவையை கம்மெத்த கண்டறிந்தது.
எதிர்காலத்தில் இலங்கை உயிர்பாதுகாப்பு சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த படகுகள் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.
