.webp)

Colombo (News 1st) இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயம் கொண்ட உயிர்ப்பை எடுத்துரைக்கும் உயிர்த்த ஞாயிறு இன்று(05) அனுஷ்டிக்கப்படுகின்றது.
சர்வதேச அளவில் இடம்பெறும் போர்களால் உணர்வற்று போய்விடாமல் அமைதிக்காக தொடர்ந்தும் உழைக்குமாறு பரிசுத்த பாரப்பரசர் லியோ வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனை திருப்பலியின் போது பரிசுத்த பாரப்பரசர் இதனை தெரிவித்தார்.
போர், அநீதி, மக்கள் மற்றும் நாடுகளை தனிமைப்படுத்துவதன் ஊடாக மக்களிடையிலான பிணைப்புகளை துண்டிக்கப்பட்டுள்ளதாக பரிசுத்த பாரப்பரசர் கூறினார்.
நல்லிணக்கமும் அமைதியும் அனைத்து இடங்களிலும் செழிப்பதற்கு நீதிக்காக போராடிய புனிதர்களின் முன்னுதாரணத்தை பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.
