சஜின் டி வாஸ் குணவர்தனவை பிணையில் விடுவிப்பு

சஜின் டி வாஸ் குணவர்தனவை பிணையில் விடுவிப்பு

by Staff Writer 31-03-2026 | 6:29 PM

Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவிட்டது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

நீதவான் சந்தேகநபருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்ததுடன், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

2013 மார்ச் 31ஆம் திகதி முதல் 2014 மார்ச் 31ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஈட்டப்பட்ட சொத்துக்களை உறுதிப்படுத்த முடியாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டிருந்தார்.

ஏனைய செய்திகள்