அஸ்வெசும திட்டத்தின் பெயர்ப்பட்டியல் வௌியீடு

அஸ்வெசும திட்டத்தின் 02ஆம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர்களின் பெயர்ப்பட்டியல்

by Staff Writer 30-03-2026 | 5:37 PM

COLOMBO (News 1st) -

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் 02ஆம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்ற பயனாளர்களின் 02ஆவது பெயர்ப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர்ப்பட்டியல் தற்போது நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அவற்றை  சமர்ப்பிக்குமாறும் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அனைத்து மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகளுக்காக www.wbb.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

அதேநேரம் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்களிடம் விண்ணப்பங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்து உரிய பிரதேச செயலகங்களில் கையளிக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.