.webp)

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று(24) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் நிதியில் சிவில் சேவைகள் அமைச்சரின் எரிபொருள் செலவுகளை செலுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அதிகாரிகளை தூண்டியதன் ஊடாக சுற்றறிக்கையை மீறி செயற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2011 முதல் 2015 வரையில் அமைச்சரின் எரிபொருள் பற்றுச்சீட்டு ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் நிதியில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு 28 இலட்சத்து 53 ஆயிரத்து 935 ரூபாவிற்கும் அதிக தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
