தபால் பொதி விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை

தபால் பொதி விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 22-03-2026 | 3:50 PM

Colombo (News 1st) பொதி​கள் விநியோக நடவடிக்கைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் பிரேமசந்திர ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிலிருந்து பொலன்னறுவை ஊடாக மட்டக்களப்பிற்கும் கொழும்பிலிருந்து பதுளை மற்றும் கொழும்பிலிருந்து கண்டிக்கான தபால் பொதி விநியோகம் ஒருநாள் விட்டு ஒருநாள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழைட, புதன்கிழமை மற்றும் வௌ்ளிக்கிழமை இரவு வேளைகளில் தூர பகுதிகளுக்கான தபால் பொதிகள் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தூர பகுதிகளிலிருந்து கொழும்பிற்கான தபால் பொதிகள் விநியோகத்தையும் ஒருநாள் விட்டு ஒருநாள் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.