.webp)

COLOMBO (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றும் 110 டொலரை கடந்தது.
பிரித்தானிய சந்தையில் பிரென்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை இன்றைய தினம் 112 டொலராக பதிவாகியுள்ளது.
அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 98 டொலர் 32 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
உலக சந்தை விலை நிலவரங்களுக்கு அமைவாக உள்நாட்டு சந்தையிலும் எரிபொருள் விலைகளை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
