நாட்டியப் பயிற்சி கலையரங்கம் அங்குரார்ப்பணம்

கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நாட்டியப் பயிற்சி கலையரங்கம் அங்குரார்ப்பணம்

by Rajalingam Thrisanno 16-03-2026 | 6:49 PM

Colombo (News 1st)  கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண தரம் மற்றும் 90/91 உயர்தர முன்னாள் மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நாட்டியப் பயிற்சி கலையரங்கம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

"கல்வி ஒளி பரப்பி, கலை வளர்த்து, மரபை மகிமைப்படுத்துவோம்" எனும் நோக்கோடும் கலை பாரம்பரியத்தை பேணும் வகையிலும் முன்னாள் மாணவர்களால் இக்கலையரங்க நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்வில் கல்லூரி அதிபர் திரு. மூ.மூவேந்தன், முன்னாள் அதிபர் திருமதி எஸ்.பாலசுந்தரம், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.