.webp)

Colombo (News 1st) அவுஸ்திரேலியா வரை முன்னெடுக்கப்படும் விமானப் சேவைகளை வாரத்திற்கு 14 ஆக அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 02ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் கொழும்பு மற்றும் மெல்பன் நகரங்களுக்கு இடையில் வாராந்தம் முன்னெடுக்கப்படும் விமான சேவைகளை 10 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிக்கை ஊடாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ள விமான சேவைகள் வாரந்தோறும் பிரதி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
