.webp)

Colombo (News 1st) எதிர்வரும் 02 மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்துடன் நேற்று(10) உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
வாகன இலக்கத் தகடு விநியோகம் கடந்த 10 மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
புதிய நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் நடவடிக்கையால் விநியோக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
கடந்த 10 மாதங்களில் 04 இலட்சத்திற்கும் அதிக வாகனங்களுக்கு இலக்கத் தகடுகள் வழங்கப்படவில்லை.
அந்த வாகனங்களுக்கான இலக்கத் தகடு விநியோகமும் விரைவில் ஆரம்பிக்கப்படுமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
வாகன இலக்கத் தகடுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் சில நிறங்களின் அடிப்படையில் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
