.webp)

Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையின் வெல்லவாய டிப்போவிற்குரிய பஸ் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பண்டாரவளையில் நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி மொனராகலை நோக்கி புறப்படவிருந்த பஸ் மொனராகலை தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது.
இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி தியத்தலாவ பகுதியில் குறித்த பஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டாரவளை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தனியார் பஸ் நடத்துநரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
