நேபாளப் பொதுத் தேர்தலில் பாலேந்திர ஷா அமோக வெற்றி

நேபாளப் பொதுத் தேர்தலில் பிரபல ரெப் பாடகர் பாலேந்திர ஷா அமோக வெற்றி

by Staff Writer 08-03-2026 | 4:49 PM

Colombo (News 1st) நேபாளப் பொதுத் தேர்தலில் பிரபல ரெப் பாடகர் பாலேந்திர ஷா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா கே.பி.ஒலியை தோற்கடித்து 68,348 வாக்குகளைப் பெற்று பாலேந்திர ஷா வெற்றி பெற்றுள்ளார்.

02 தசாப்தங்களாக நேபாளத்தை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரபல ரெப் பாடகர் பாலேந்திர ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும் ஊழலை கண்டித்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியது.

இதனையடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்ததுடன், உயர் நீதிமன்ற முன்ளாள் நீதியரசர் சுசீலா கார்க்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.

குறித்த போராட்டத்திற்கு பிரபல ரெப் பாடகர் பாலேந்திர ஷா முழுமையாக ஆதரவை வௌிப்படுத்தியவராவார்.