மீன்பிடி படகிலிருந்து போதைப்பொருள் கைப்பற்றல்

தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகிலிருந்து போதைப்பொருள் கைப்பற்றல்

by Staff Writer 08-03-2026 | 2:56 PM

Colombo (News 1st) இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் இருந்து 103 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த படகிலிருந்து 102 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் மற்றும் 900 கிராமிற்கும் அதிக கொக்கெய்ன் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.

இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் 06 சந்தேகநபர்களுடன் பலநாள் மீன்பிடி படகு நேற்று(07) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர்கள் இன்று(08) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

குறித்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.