1900 லீட்டர் டீசலை தம்வசம் வைத்திருந்த நபர் கைது

1900 லீட்டர் டீசலை தம்வசம் வைத்திருந்த நபர் கைது

by Staff Writer 04-03-2026 | 3:20 PM

Colombo (News 1st) சட்டவிரோதமாக 1900 லீட்டர் டீசல் தொகையை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கலென்பிந்துனுவெவ, கோமரங்கடவல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விலங்கு பண்ணையில் 10 எரிபொருள் பெரல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோமரங்கடவல பகுதியை சேர்ந்த 49 வயதான சந்தேகநபர் கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று(04) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையே, புல்மோட்டை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த வர்த்தக நிலையம் சுற்றிவளைக்கப்பட்ட போது 390 லீட்டர் டீசலுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.