பழைய மாணவர்களின் நகர்வல வீதியோட்டம்

கொழும்பு விவேகானந்தா கல்லூரி பழைய மாணவர்களின் பங்களிப்பில் சிறப்பு நகர்வல வீதியோட்டம்

by Rajalingam Thrisanno 01-03-2026 | 3:04 PM

Colombo (News 1st) கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று(01) காலை பழைய மாணவர்களின் பங்களிப்பில் சிறப்பு நகர்வல வீதியோட்டம் நடைபெற்றது.

இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட சுமார் 150 பழைய மாணவர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

கல்லூரி முன்பாக ஆரம்பமாகி சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நீடித்த இந்த சிறப்பு நகர்வல வீதியோட்டத்தில் பங்கேற்ற அனைத்து பழைய மாணவர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு 1926ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு விவேகானந்தா கல்லூரி இந்த வருடம் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகின்றது.

அந்த வகையில் இன்று முதல் இம்மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.