.webp)

Colombo (News 1st) டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஊடாக அவசர நிவாரணப் பணிகள் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டன.
அதன் மற்றுமொரு கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்பும் செயற்பாடு அமைந்திருந்தது.
அவுஸ்திரேலியாவின் மிண்டரூ அறக்கட்டளையின் பங்களிப்புடன் கம்மெத்த Care & Dare திட்டம் மக்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை மற்றும் அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்காக இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலையில் கம்மெத்த Care & Dare திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலைக்கு சென்றிருந்தனர்.
கம்மெத்த மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இதற்கு காரணமாக அமைந்திருந்தது.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளரும் சிரச ஊடக வலையமைப்பின் தலைவரும் கம்மெத்த தலைவருமான ஷெவான் டெனியல் தலைமையிலான கம்மெத்த குழுவினர் இன்றைய தினமும் இந்த பணியில் இணைந்திருந்தனர்.
இரத்தோட்டை பிரதேச செயலாளர் அஞ்சனா திசாநாயக்க, அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் துசித திசாநாயக்க, இரத்தோட்டை இந்து மகா வித்தியாலய அதிபர் அழகன் திருச்செல்வம், இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலை அதிபர் ஏ.இராஜரட்ணம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
சுகாதார வலயம், ஊட்டச்சத்து பொதிகள் வழங்கும் வலயம் மற்றும் சுகாதார பொதிகள் வழங்கும் வலயம் என்பன இன்று இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலையில் நிறுவப்பட்டிருந்தன.
கம்மெத்த Care & Dare திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு கம்மெத்தவுடன் அரச ஊழியர்களுடன் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
அத்தியாவசிய உலருணவு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் வலயம், நீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்பு உள்ளிட்ட வீட்டு உபகரணங்கள் வழங்கும் வலயம் என்பன இன்று மக்களுக்கான செயற்பட்டன்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவியுடன் சட்டசேவை வலயம் அமைக்கப்பட்டிருந்ததுடன் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை சேவைகளுக்கு பிரத்தியேக வலயம் ஒதுக்கப்பட்டிருந்தது.
மக்களுக்கு தேவையான தொழில் வழிகாட்டல்களை வழங்குவதற்காக தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை இன்று கம்மெத்தவுடன் கைகோர்த்திருந்தது.
கொத்மலையில் ஆரம்பமான கம்மெத்த Care & Dare திட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.
பசறை, மடுல்சீமை, வெலிமடை, நில்தண்டாஹின்ன, கம்பளை, உடுதும்பர உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள பல்லாயிரணக்கணக்கான மக்கள் இதன்மூலம் பயனடைந்திருந்தனர்.
மீண்டெழும் நாடே எமது எதிர்பார்ப்பு
மீள கட்டியெழுப்புதல் மற்றும் மீண்டெழுதல்
அதற்காக கம்மெத்தவுடன் கைகோர்த்துள்ள அவுஸ்திரேலியாவின் மிண்டரு அறக்கட்டளைக்கும் இந்நாட்டின் அரச நிறுவனங்கள் மற்றும் அதன் அனைத்து அதிகாரிகளுக்கும் நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனெனில், உதவி தேவைப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு துணையாக இருப்பதற்கு அவர்கள் மூலமே எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
கம்மெத்த Care & Dare-இன் அடுத்தகட்ட தகவல்களை விரைவில் உங்களிடம் கொண்டுவர நாம் தயாராக உள்ளோம்.
ஒன்றிணைந்து பாதுகாப்போம்.
ஒன்றிணைந்து எழுவோம்...
கம்மெத்த மக்களுடன் மக்களுக்காக..
.jpg)
.jpg)
.jpg)

