.webp)
-554056.jpg)
COLOMBO (News 1st) நெல் அறுவடைக்காக விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு தற்போது ஈர நெல்லை கொள்வனவு செய்வதற்கான இயலுமை இல்லை எனவும், விவசாயிகளுக்கு நெல்லை உலர வைப்பதற்கான தொழில்நுட்ப முறைகள் மற்றும் இயந்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் விவசாய நிலங்களுக்கே சென்று குறைந்த விலைக்கு ஈர நெல்லை கொள்வனவு செய்வதினூடாக, விவசாயிகள் நட்டத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.
ஈர நெல்லை உலரவைப்பதற்காக சுமார் 25 விவசாயிகளுக்கு ஒரு இயந்திரம் வீதம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனூடாக விவாசயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுக்காணுவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.
