மண்சரிவு ஆய்வுகளுக்காக 7655 கோரிக்கைகள்

மண்சரிவு தொடர்பான அபாய ஆய்வுகளை முன்னெடுக்க 7655 கோரிக்கைகள் - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்

by Chandrasekaram Chandravadani 21-02-2026 | 3:53 PM

COLOMBO (News 1st)  டித்வா புயலினை தொடர்ந்து மண்சரிவு தொடர்பான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு 7655 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.


கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளில் 6,187 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் மீகஹாகிவுல, கந்தஹெட்டிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்