நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை திகதி

க்ரிஷ் கொடுக்கல் - வாங்கல் வழக்கின் ஆரம்ப விசாரணைக்கான திகதி நிர்ணயம்

by Staff Writer 19-02-2026 | 2:10 PM

Colombo (News 1st) க்ரிஷ் கொடுக்கல் - வாங்கல் ஊடாக 70 மில்லியன் ரூபாவை முறைகேடு செய்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்ப விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(19) திகதி நிர்ணயித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது திகதி நிர்ணயிக்கப்பட்டது.

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட மாஅதிபரினால் கடந்த வருடம் பெப்ரவரி 05ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வசந்த சமரசிங்க, 2016ஆம் ஆண்டு அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து நிதிக்குற்ற புலனாய்வு பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டது.

இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ஸ வழக்கின் சந்தேகநபராக பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.