அக்குரேகொட இரட்டை கொலை விசாரணைக்கு 10 குழுக்கள்

அக்குரேகொட இரட்டை கொலை விசாரணைக்கு 10 குழுக்கள்

by Staff Writer 15-02-2026 | 10:47 PM

Colombo (News 1st) அக்குரேகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய 04 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். 

துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் தீப்பற்றி எரிந்த நிலையில் காலி - பத்தேகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அடுத்தக்கட்ட விசாரணைகளுக்காக கார் அரச இராசயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக்க மல்லவாரச்சி மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நேற்று முன்தினம்(13) சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கரந்தெனிய சுத்தா என்பவரால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பணியகம் என்பவற்றை உள்ளடக்கிய 10 குழுக்களால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துருகிரிய போரே பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சட்டத்தரணி மற்றும் 42 வயதுடைய அவருடைய மனைவி ஆகியோரே கொலை செய்யப்பட்டனர்.