அமரகீர்த்தி கொலை : 12 பேருக்கு மரணதண்டனை

அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கில் 12 பேருக்கு மரணதண்டனை

by Staff Writer 11-02-2026 | 3:15 PM

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 மே 09ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெற்ற அமைதி போராட்டத்தின் போது பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகியோர் மீது நிட்டம்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 41 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் வழக்கின் தீர்ப்பை இன்று அறிவிப்பதற்கு கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.

ஏனைய செய்திகள்