.webp)

Colombo (News 1st) 03 கிலோ 18 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கிரிபத்கொடை வைத்தியசாலை வீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிரிபத்கொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதான சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வௌியான தகவல்களுக்கு அமைய கட்டுநாயக்க 18ஆம் மைல்கல் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த 32 வயதான தாய்லாந்து பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
