ITAK பாராளுமன்ற குழு தலைவராக இரா.சாணக்கியன் நியமனம்

by Staff Writer 03-02-2026 | 7:20 PM

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கடந்த மாதம் 24ஆம் திகதி திருகோணமலையில் இறுதியாக கூடியுள்ளது. 

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், டொக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன், சண்முகம் குகதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.