FCID-யில் ஷிரந்தி ராஜபக்ஸ

FCID-க்கு சமுகமளித்த ஷிரந்தி ராஜபக்ஸ

by Staff Writer 03-02-2026 | 11:59 AM

Colombo (News1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் இன்று(03) ஆஜரானார்.

சிரிலிய எனும் பெயரில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக் கணக்கின் நிதி முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் அவர் அங்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் சிரிலிய எனும் பெயரில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக் கணக்கின் நிதி முறைகேடுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தக் கணக்கு ஷிரந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட 03 பேரின் கூட்டுக் கணக்காக அரச வங்கியொன்றின் சுதுவெல்ல கிளையில் திறக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது ஷிரந்தி ராஜபக்ஸவின் தேசிய அடையாள அட்டை இலக்கமாக 222 222 222V என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கின் ஊடாக பல சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 2025 ஜூன்  முதலாம் திகதி அப்போதைய சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஷிரந்தி ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதேவேளை. றக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணையிலும் சிரிலிய சவிய திட்டத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 27ஆம் திகதி வாக்குமூலம் பெற்றுகொள்வதற்காக ஷிராந்தி ராஜபக்ஸ  அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அன்றைய தினம் தம்மால் சமுகமளிக்க முடியாதென அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.