.webp)
-553506.jpg)
COLOMBO(News 1st) 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களின் பாவனையை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறுவர் உள நல விசேட வைத்தியர்கள் ஊடாக அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தடையை அமுல்படுத்த முன்னர் பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவும் சமூக ஊடகத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்ற உலகலாவிய போக்கு தற்போது உருவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைத் தடுப்பதற்காக சட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் குறிப்பிட்டார்.
இதற்காக ஏற்கனவே அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதனிடையே, சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடைகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன கூறினார்.
