யுக்ரைன் மீதான தாக்குதலை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்

யுக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வார காலத்திற்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி இணக்கம்

by Staff Writer 30-01-2026 | 5:26 PM

COLOMBO (News 1st) யுக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தி வைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தின் போது ட்ரம்ப் இதனைக் கூறியுள்ளார். 

யுக்ரைனில் தற்போது நிலவும் அதிக குளிருடனான வானிலையை கருத்திற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி தனது தனிப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப்  குறிப்பிட்டுள்ளார். 


எவ்வாறாயினும், இந்த விடயத்தை ரஷ்யா இதுவரை உறுதிப்படுத்தவில்லை என சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ரஷ்யா வழங்கிய உறுதிமொழியை கடைப்பிடிக்கும் என தாம் நம்புவதாக யுக்ரேன் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்க்கி கூறியுள்ளார்.

யுக்ரேனில் எதிர்வரும் நாட்களில் -24 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.