.webp)
-553494.jpg)
COLOMBO(News 1st) எதிர்காலத்தில், பிரஜா சக்தி சபைகளின் அனுமதி பெற்ற அபிவிருத்தி திட்டங்களை மாத்திரம் கிராமிய மட்டத்தில் செயற்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவிக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அதிகாரிகளோ தாம் இஷ்டப்பட்டவாறு அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே கூறினார்.
நாட்டில் 10,000 மேற்பட்ட பிரஜா சக்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாட்களில் மேலும் 4000 சபைகளை நிறுவவுள்ளதாகவும் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
அவற்றின் அனுமதியுடன் அபிவிருத்தி திட்ட யோசனைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
