.webp)
-553500.jpg)
COLOMBO(News1st) இந்தியாவின் பல பகுதிகளில் பரவி வரும் நிபா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் அச்சமடைய வேண்டாம் எனவும் சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
குறித்த வைரஸை அடையாளம் காண்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் நாட்டில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
