.webp)

COLOMBO (News 1st) 2025 திருமதி உலக அழகு இராணிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
திருமதி உலக அழகு இராணிப் போட்டியின் இறுதிக் கட்டம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது.
உலகின் மிகவும் பிரபல்யமான, நீண்ட காலமாக நடைபெற்று வரும் சர்வதேச அழகு இராணிப் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் 60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசுப் களமிறங்கினார்.
திருமதி உலக அழகு இராணிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த சனீதா சீடாகெத் க்ரேதோன் கிரீடத்தை சூடினார்.
இரண்டாவது இடத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பேஜ் எவிங் வென்றார்.
மூன்றாம் இடத்தை இலங்கையைச் சேர்ந்த சபீனா யூசுப் பெற்றுக் கொண்டார்.
போட்டோஜெனிக் பிரிவில் 60 நாடுகளை வீழ்த்தி அவர் முதலிடத்தை சுவீகரித்தார்.
