.webp)

Colombo (News 1st) கொலம்பியாவில் பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு கொலம்பியாவிலுள்ள மலைப்பாங்கான பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Cucuta நகரிலிருந்து புறப்பட்ட விமானம் Ocana நகரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் தரையிறங்குவதற்கு 11 நிமிடங்களுக்கு முன்னர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
