ரொஹான் ஓலுகலவிற்கு புதிய பதவி

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல, வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமனம்

by Staff Writer 29-01-2026 | 8:07 AM

Colombo (News 1st) உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல, வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரொஹான் ஓலுகல, தற்போது மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவின் பணிப்பாளராக செயற்படுகின்றார்.

கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, இஷார செவ்வந்தி உள்ளிட்ட வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்த, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கடந்த காலப்பகுதியில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ரொஹான் ஓலுகல நேரடியாக தொடர்புபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.