.webp)
Colombo (News 1st) 2026ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான புதிய கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தல் மற்றும் முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு இன்று(29) நடைபெற்றது.
பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கொழும்பு மாவட்டத்தின் அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் தேசிய நிகழ்வு நடைபெற்றது.
பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலீன் ஹேவகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
புதிய கல்வி மறுசீரமைப்பிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட வகுப்பறைகளை பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் கண்காணித்தனர்.
தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை இணைத்துக் கொள்ளும் உத்தியோகபூர்வ நிகழ்வும் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
