.webp)
-824892-553425.jpg)
Colombo (News 1st) அமெரிக்க கடற்படையின் சீல் பயிற்சியை நிறைவு செய்து கௌரவம் மிக்க சீல் பதக்கம் பெற்ற இலங்கை கடற்படையின் சிறப்பு நடவடிக்கை படையின் அதிகாரி லெப்டினன்ட் கோயன் சமிதா(28 வயது) காலமானார்.
அமெரிக்க கடற்படை சீல் பயிற்சி திட்டம் உலகின் மிகவும் கடினமான இராணுவப் பயிற்சியாக அறியப்படுகிறது.
இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப்படையின் அதிகாரியான லெப்டினன்ட் கோயன் சமிதா, 14 மாத பயிற்சியின் பின்னர் பயிற்சி திட்டத்தை நிறைவு செய்தார்.
கடந்த ஆகஸ்ட் முதல் இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப்படையின் அதிகாரியான லெப்டினன்ட் கோயன் சமிதவிற்கு அந்த சிறப்பு பதக்கத்தை அணிய முடிந்தது.
இந்நிலையில் வெலிசறை இராணுவ முகாமில் காலமானார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
