களுத்துறை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் எகொடயன பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு

by Staff Writer 27-01-2026 | 5:07 PM

Colombo (News 1st) களுத்துறை மொரோந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எகொடயன பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு(26) 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் 70 மற்றும் 62 வயதான இருவரே காயமடைந்துள்ளனர்.