.webp)

COLOMBO(News1st) கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
மொனராகலை - சுதுவதுஆர பகுதியில் விறகு லொறி கவிழ்ந்ததில் சாரதியின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, ருவான்வெல்ல வராவல - கேகாலை வீதியின் மத்தேகொட பகுதியில் மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்தனர்.
பதுரெலிய களுகல பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் 18 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் - கரையோர வீதி பகுதியில் கெப் வாகனத்துடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
17 மற்றும் 21 வயதான இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த 22 நாட்களில் 135 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 15 சாரதிகள் மற்றும் பாதசாரிகள் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
