அரச வைத்திய அதிகாரிகள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 24-01-2026 | 1:03 PM

Colombo (News 1st) மூன்று கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(24) தொடர்கின்றது. 

நேற்று முற்பகல் முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 

இதனால் வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த நோயாளர்கள் அசெளகரியங்களை எதிர்நோக்கியதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். 

வௌிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த பெரும்பாலான நோயாளர்களுக்கு இன்றும் சிகிச்சை பெறாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். 

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் கராபிட்டிய தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.