.webp)
-553285.jpg)
COLOMBO (News 1st)-
'Board of Peace' எனும் அமைதிக்கான சபையில் இணையுமாறு கனடாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை மீளப்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையில் கனேடிய பிரதமர் சுவிட்ஸர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் அண்மையில் கருத்துகளை முன்வைத்திருந்தார்.
இதன் காரணமாகவே அமைதிக்கான சபைக்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி மீள பெற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள Board of Peace எனும் அமைதிக்கான சபை அமைப்பிற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு சுவிட்ஸர்லாந்தில் நேற்று (22) நடைபெற்றது.
