கொழும்பு மாநகர சபை நிலையியல் குழு தலைவர்கள் தெரிவு

கொழும்பு மாநகர சபையின் 23 நிலையியல் குழுக்களுக்கான தலைவர்கள் தெரிவு இன்று

by Staff Writer 23-01-2026 | 12:35 PM

Colombo (News 1st)- கொழும்பு மாநகர சபையின் 23 நிலையியல் குழுக்களுக்கான தலைவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. 

போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நிர்வாகம் தொடர்பான நிலையியல் குழு, திட்டமிடல் மற்றும் விளம்பரம் தொடர்பான நிலையியல் குழு, தொழில்முனைவோர் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான நிலையியல் குழு, Clean Sri Lanka தொடர்பான நிலையியல் குழு ஆகியன இன்று(23) கூடவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார். 

அனைத்து குழுக்களிலும் 06 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். 

கொழும்பு மாநாகர சபையின் நிதித் தெரிவுக்குழு அண்மையில் கூடியது.

நிதி தெரிவுக்குழுவின் தலைவராக மேயர் வ்ராய் கெலி பல்தசார் செயற்படுகின்றார்.