மின்சார சபை மறுசீரமைப்பு அடுத்த மாதம்

மின்சார சபை மறுசீரமைப்பு அடுத்த மாதம் - எரிசக்தி அமைச்சு

by Staff Writer 22-01-2026 | 2:44 PM

Colombo (News 1st) இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடைமுறையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பாரத்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது இறுதி கட்டத்திலுள்ளதாக எரிசக்தி பிரதியமைச்சர் எம்.எம்.அர்கம் தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதற்கான செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.