தர்மயுத்தய பாகம் 02 நாளை முதல் திரையரங்குகளில்..

தர்மயுத்தய பாகம் 02 நாளை(23) முதல் திரையரங்குகளில்..

by Staff Writer 22-01-2026 | 3:43 PM

Colombo (News 1st) தர்மயுத்தய திரைப்படத்தின் முதலாம் பாகம் Box office சாதனை படைத்தது.

அந்த பழைய நினைவுகளை மீட்டெடுத்து, தர்ம யுத்தய இரண்டாம் பாகத்தை வெளியிட மகாராஜா ஊடக வலையமைப்பு தயாரானது.

காதல், நெகிழ்ச்சி, திகில் அனுபவங்களை கொண்ட இந்த திரைப்படம், நாட்டின் திரைப்பட துறையை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்செல்லும் மிகவும் சிறப்பான சாதனை என்றே கூறலாம்...

அருண ஜயவர்தன இந்த திரைப்படத்தின் இயக்குநர் ஆவார்.

இந்த திரைப்படம் சிரச தொலைக்காட்சி பணிப்பாளர் தர்ம ஸ்ரீ பண்டார ஏகநாயக்கவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை நாடளாவிய ரீதியில் திரையரங்குகளில் நாளை(23) முதல் கண்டுகளிக்கலாம்.