உலக சாதனை படைத்த இலங்கை ஜோடி

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைத்த இலங்கை ஜோடி

by Staff Writer 17-01-2026 | 11:05 PM

Colombo (News1st) 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இலங்கையின் விரான் சமுதித்த இன்று பதிவானார்.

ஜப்பானுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் 192 ஓட்டங்களைக் குவித்தார்.

இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் இலங்கையின் ஹசித்த போயகொட குவித்த 191 ஓட்டங்களே 19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் இன்னிங்ஸ் ஒன்றில் வீரர ஒருவர் குவித்த  அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 387 ஓட்டங்களைக் குவித்தது.

விரான்த்துடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய திமந்த மஹவித்தான 115 ஓட்டங்களைப் பெற்றார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்காக 328 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவித்ததுடன் இது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்குமான அதி சிறந்த இணைப்பாட்ட சாதனையாகும்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நமீபியாவில் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. 

ஏனைய செய்திகள்