பூஸ்ஸ சிறைச்சாலையின் 6 கைதிகள் மாற்றம்

பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் 6 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

by Staff Writer 17-01-2026 | 4:38 PM

Colombo (News 1st)

பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 6 கைதிகள் களுத்துறை, அங்குனுகொலபெலெஸ்ஸ மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சிறைச்சாலை ஒன்றிற்கு தலா 2 கைதிகள் வீதம் மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். 

கைதிகள் பூஸ்ஸ சிறைச்சாலையின் டி பிரிவின் கூரையில் ஏறி நேற்று (16) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக, சிறைச்சாலையின் கூரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஏனைய சேதங்களை மதிப்பிடும் பணிகள் இன்று  (17) முன்னெடுக்கப்பட்டன. 

சிறைச்சாலை திணைக்களத்தினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.