.webp)

Colombo (News 1st)
எகிப்து - எத்தியோப்பியாவுக்கிடையிலான நைல்நதி நீர் தொடர்பான பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தயாராகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதமொன்றை அனுப்பி எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசிக்கு இதனைத் தெரிவித்துள்ளார். நைல்நதியின் துணை நதியில் எத்தியோப்பியாவால் நிர்மாணிக்கப்பட்ட அணை தொடர்பில் எகிப்து அதிருப்தி வௌியிட்டுள்ளது.
இந்த அணையின் கட்டுமானம் கடந்த செப்டம்பரில் 5 பில்லியன் டொலர் செலவில் நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்த கட்டுமானம் சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவதாகவும் எதிர்காலத்தில் வறட்சி மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுக்குமெனவும் எகிப்து எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
